மற்றவர்கள் காண்பதற்காக நிகழ்ச்சிகளை நடத்துவதும், அதனைப் பார்த்து இன்புறுவதும், மனிதரின் பண்பாட்டுச் செயற்பாடுகளில் ஒன்றாகப் பலகாலமாகவே நிலவி வருகிறது. இவ்வாறு நிகழ்த்துபவர்களுக்கும், அதனைப் பார்க்க வருபவர்களுக்கும் வேண்டிய வசதிகளை வழங்குமுகமாக அமைக்கப்படும் கட்டிடம் அல்லது அமைப்பு கலையரங்கம் அல்லது கலையரங்கு என்று அழைக்கப்படுகின்றது.
கலையரங்கம்: கலையரங்க வகைகள்
கலையரங்கங்கள், வெவ்வேறு வகையான கலைகளுக்கு உரிய சிறப்புக் கட்டிடங்களாகவோ, பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடிய வகையில் பலநோக்குக் கட்டிடங்களாகவோ அமைகின்றன. இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகச் சிறப்பாக அமைக்கப்படும் கட்டிடங்கள் இசையரங்கங்கள் என்றும், நாடக நிகழ்வுகளுக்காக அமைபவை நாடக அரங்கங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
கலையரங்கம்: கலையரங்கக் கட்டிடமொன்றின் அடிப்படைக் கூறுகள்
எந்த வகையாக இருந்தாலும், கலையரங்கக் கட்டிடத்துக்கு இருக்கக்கூடிய சில அடிப்படையான கூறுகள் உண்டு. அவற்றைப் பின்வருமாறு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற இடம்.
அவற்றோடு தொடர்புடைய துணைநடவடிகைகளுக்கான இடங்கள்.
பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்வுகளைக் காண்பதற்கான இடம்.
பார்வையாளருக்கான பிற வசதிகள்.
பொது இடங்களும், நடை பாதைகளும்.
நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் அல்லது நடிப்புக்குரிய இடம் பொதுவாக மேடை எனப்படுகின்றது.
கலையரங்கம்: மேற்கோள்கள்
"Auditorium Seating Layout Complete Guide". theatresolutions.net. Theatre Solutions. 2016-10-20. Archived from the original on 2016-10-21. Retrieved 2016-10-21.
எல்லா வர்த்தக சின்னங்களும், சேவை முத்திரைகளும், வர்த்தக பெயர்களும், தயாரிப்பு பெயர்களும், தளத்தில் காணப்படும் சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் சொத்து.